செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கடும் உறைபனி - தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் தவிப்பு

Published On 2018-11-04 06:04 IST   |   Update On 2018-11-04 06:04:00 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் உறைபனியால், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். #KashmirSnowfall
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்த பனிப்பொழிவால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று கடும் உறைபனி படர்ந்து காணப்பட்டது. கடும் பனியால் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களில் உறை பனி சூழ்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது. சாலைகளில் பனி காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.



ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவகர் கணமாய் பகுதி பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்களில் வந்த 300 பேர் பாதை தெரியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #KashmirSnowfall
Tags:    

Similar News