செய்திகள்

சத்தீஸ்கரில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி - கட்சி அலுவலகத்தில் மோதல்

Published On 2018-11-02 03:36 GMT   |   Update On 2018-11-02 03:36 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருட்களை அடித்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. #ChhattisgarhElection #ChhattisgarhCongress
ராய்ப்பூர்:

சத்திஸ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 வேட்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் சில வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. ராய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராய்ப்பூர் தெற்கு தொகுதி தொடர்பாக நடந்த இந்த மோதலில், அலுவலகத்தில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை தேர்தல் பொறுப்பாளர் புனியா சமாதானப்படுத்தினார்.



இதேபோல் பிலாஸ்பூரிலும் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். ஆனாலும் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என கட்சி நிர்வாகி நரந்திர போலார் கூறியுள்ளார்.

‘கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றிய தங்களுக்கு சீட் வழங்கப்பட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். அதில் தவறு இல்லை. அதேசமயம், இங்கு யாரும் அதிருப்தியாளர்கள் இல்லை. நாங்கள் ஒரே குடும்பம். பாஜகவுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்றார் நரேந்திர போலார். #ChhattisgarhElection #ChhattisgarhCongress
Tags:    

Similar News