செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பிடிவாரண்ட்’ பிறப்பித்த நீதிபதிக்கு மிரட்டல்

Published On 2018-10-29 10:52 GMT   |   Update On 2018-10-29 10:52 GMT
சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த மராட்டிய மாநிலம் தர்மா பாத் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChandrababuNaidu
நகரி:

2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த கால கட்டத்தில் மராட்டிய மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே பப்ளி என்ற இடத்தில் அணைகட்டப்பட்டது.

அப்போது ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களுடன் மராட்டிய மாநிலத்தில் அணைக்கட்டப்பட்ட பப்ளி என்ற இடத்துக்கு போராட் டம் நடத்த சென்றார்.

144- தடை உத்தரவை மீறி சென்ற சந்திரபாபு நாயுடு உள்பட 18 பேரை மராட்டிய அரசு கைது செய்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி மராட்டிய மாநிலம் தர்மாபாத் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

பலமுறை நோட்டீசு அனுப்பியும் சந்திரபாபு நாயுடு உள்பட யாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இந்தநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 3 பேர் தர்மாபாத் கோர்ட்டில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றனர்.

எனவே, சந்திரபாபுநாயுடு உள்பட 15 பேருக்கு கடந்த 12-ந்தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடு தரப்பில் வக்கீல் ஆஜராகி அவரை கைது செய்வதற்கு விலக்கு பெற்றார். மற்ற 14 பேருக்கு பிடிவாரண்ட் உள்ளது.

இந்தநிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்த மராட்டிய மாநிலம் தர்மா பாத் நீதிபதி நரேந்திர கஜபியேவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. ஆந்திராவில் இருந்து அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் பிடிவாரண்டை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எழுதியவர் பெயர் அதில் இல்லை.

இதையடுத்து அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #ChandrababuNaidu
Tags:    

Similar News