செய்திகள்

5 மாநில தேர்தல்களால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தாமதம்

Published On 2018-10-16 09:20 GMT   |   Update On 2018-10-16 09:20 GMT
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 3-வது வாரத்தில் தாமதமாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Parliament
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு இருப்பார்கள்.



தேர்தல் பிரசாரத்துக்கு வசதியாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை தள்ளிப் போடுவது பற்றி டெல்லியில் இன்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடந்தது.

இதில் நவம்பர் மாத இறுதிக்குப் பதிலாக டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பிறகு குளிர்கால கூட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். #Parliament

Tags:    

Similar News