செய்திகள்

கொலை - கற்பழிப்பு வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-10-16 09:15 GMT   |   Update On 2018-10-16 09:15 GMT
கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி அரியானா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #Rampal
புதுடெல்லி:

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார்.

திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாரானார். அரியானாவில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரியானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மீக சேவையாற்றினார்.



இவர் ஆன்மீகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார். இதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து போலீசார் ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியானது.

ஹசார் கோர்ட்டில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஹிசார் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

சாமியார் ராம்பால் ஹிசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. #Rampal
Tags:    

Similar News