செய்திகள்

உத்தரப்பிரதேசம் - கட்டிடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

Published On 2018-10-14 23:28 IST   |   Update On 2018-10-14 23:28:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியானார். மேலும் 17 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #BuildingCollapse
லக்னோ :

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக முதல் கட்டமாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 17 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரன்வீர் பிரசாத் ஊடகங்களிடம் கூறுகையில், ’கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்தபட்டுள்ளது. கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார். #BuildingCollapse
Tags:    

Similar News