செய்திகள்

மேகாலயாவில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் குறைப்பு

Published On 2018-10-10 16:35 GMT   |   Update On 2018-10-10 16:35 GMT
பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில் மேகாலயாவில் லிட்டருக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என முதல் மந்திரி பிரெஸ்டோன் டின்சாங் அறிவித்துள்ளார். #PetrolDieselPrice #Meghalaya
ஷில்லாங்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, மத்திய அரசு கடந்த வாரம் 2.50 ரூபாயை குறைத்து உத்தரவிட்டுள்ளது. எனவே, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் குறைத்தன. 

இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான விலை 2.50 ரூபாய் குறைக்கப்படுவதற்கு அந்த மாநில சட்டசபையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஏற்கனவே, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #Meghalaya
Tags:    

Similar News