செய்திகள்

சபரிமலை தீர்ப்பு விவகாரம் - மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2018-10-09 06:53 GMT   |   Update On 2018-10-09 06:53 GMT
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு தொடர்பான மறு சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #Sabarimala #SupremeCourt
புதுடெல்லி:

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஐயப்ப பக்தர்களின் ஆச்சாரங்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் ஐயப்ப பக்தர்கள், கோவில் தந்திரிகள் கோரிக்கை விடுத்தனர்.



மேலும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மறு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்த வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க வக்கீல்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு தொடர்பான மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் படியும், அங்கு வழக்கு பட்டியலிட்ட பின்பு அதன்மீது விசாரணை நடைபெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #Sabarimala #SupremeCourt

Tags:    

Similar News