செய்திகள்
கோப்புப்படம்

உத்தரப்பிரதேசத்தில் அக்டோபர் 25-ம் தேதி முதல் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

Published On 2018-10-06 17:19 IST   |   Update On 2018-10-06 17:19:00 IST
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அக்டோபர் 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன. #UPstateemployeesstrike #UPstateteachers
லக்னோ:

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சுமார் 15 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலகப் பணியாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைக்கு பதிலாக புதிய  ஓய்வூதிய முறையை யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அம்மாநில அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த முறையில் சுமார் 5700 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அரசுப் பணியாளர் தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய முறையையே தொடர்ந்து செயல்படுத்துமாறு மாநில அரசை அவர்கள் வலியிறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  லக்னோ நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ஹரி கிஷோர் திவாரி, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வரும் 8-ம் தேதி சட்டசபையை நோக்கி பேரணியாக செல்லும் போரட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பேரணிக்கு பின்னரும் தங்களது கோரிக்கையின்படி பழைய ஓய்வூதிய முறையை பின்பற்ற மாநில அரசு தவறினால், வரும் 25-ம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். #UPstateemployeesstrike #UPstateteachers #UPteachersstrike #strikefromOct25 
Tags:    

Similar News