செய்திகள்

மனநலம் குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றி தமிழக அரசு பதில்

Published On 2018-10-03 22:25 GMT   |   Update On 2018-10-03 22:25 GMT
மனநலம் குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றிய தங்களது பதிலை தாக்கல் செய்தன. #SupremeCourt #RehabilitationHome #MentalIllness
புதுடெல்லி:

மனநலம் பாதித்தவர்கள், குணமான பிறகும் ஆதரிப்பதற்கு யாரும் இல்லாததால், மனநல மருத்துவமனைகளிலேயே தங்க வைக்கப்படுவதாகவும், ஆகவே, அவர்களுக்காக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் கவுரவ் பன்சால் என்ற வக்கீல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதற்கு கடந்த ஆண்டு ஜூலை 10-ந் தேதி, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, ஓராண்டுக்குள் மறுவாழ்வு இல்லங்களை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் யு.யு.லலித், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றிய தங்களது பதிலை தாக்கல் செய்தன.

இதுபோல், மற்ற மாநிலங்கள் 2 வாரங்களுக்குள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். #SupremeCourt #RehabilitationHome #MentalIllness
Tags:    

Similar News