செய்திகள்

ரெயில்களில் பெண்களை கேலி செய்தால் 3 ஆண்டு சிறை

Published On 2018-09-24 04:18 IST   |   Update On 2018-09-24 04:18:00 IST
ரெயில்களில் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EveTeasing #Women #Train
புதுடெல்லி:

ரெயில்களில் பயணம் செய்யக்கூடிய பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ரெயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தண்டனை காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென ரெயில் பாதுகாப்புபடை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ரெயில்வே பாதுகாப்புபடையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரெயில்களில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மற்றும் பெண்களிடம் கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே போலீசாரின் உதவியை நாட வேண்டி உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ரெயில்வே போலீசாரின் உதவி இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.500-ல் இருந்து ரூ.1,000-மாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  #EveTeasing #Women #Train
Tags:    

Similar News