செய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் - வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

Published On 2018-09-22 11:11 GMT   |   Update On 2018-09-22 11:11 GMT
ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு மூலமாக இலங்கைக்கு கடத்த இருந்த 229.8 கிலோ கஞ்சாவை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். #CannabisSeized #Andhra #TamilNadu
ஐதராபாத்:

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா கடத்துவது அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்துவதை தடுக்க ஆந்திரா மற்றும் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வருவாய் நுண்ணறிவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது காரில் 229.8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவர் கையும் களவுமாக பிடிபட்டனர்.



அவர்களிடம் இருந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட இந்த கஞ்சா, தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்ததாக தெரிவித்துள்ளார். #CannabisSeized #Andhra #TamilNadu
Tags:    

Similar News