செய்திகள்

உத்தரப்பிரதேசம் - மழை தந்த மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு

Published On 2018-09-19 14:39 GMT   |   Update On 2018-09-19 14:39 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. #UPRain
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீண்டுவராத உ.பி. மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூர், பாரியெல்லி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த மர்ம காய்ச்சல் மக்களை பாதித்து வருகிறது. மர்ம காய்ச்சலினால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.



இதுதொடர்பாக, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. பரேலியில் 24 பேரும், பாடனில் 23 பேரும், ஹர்டோயில் 12 பேரும், சீதாப்பூரில் 8 பேரும், பஹ்ரைச்சில் 6 பேரும், பிலிபிட் மற்றும் ஷாஹஜான்புரில் தலா 2 பேரும் பலியாகி உள்ளனர்.

மர்ம காய்ச்சலை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய தேவையான மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர். #UPRain
Tags:    

Similar News