செய்திகள்

இந்திய வாக்காளர் அடையாள அட்டையுடன் 23 பாகிஸ்தானியர்கள் பிடிபட்டனர்- விசாரணை தொடங்கியது

Published On 2018-09-17 10:06 GMT   |   Update On 2018-09-17 10:06 GMT
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய வாக்காளர் அடையாள அட்டைகளுடன் 23 பாகிஸ்தானியர்கள் பிடிபட்டது தொடர்பாக விசாரணை தொடங்கியது. #PakistanCitizens #DehradunPolice
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நீண்ட கால விசாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களில் இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாநில போலீசின் உளவுப்பிரிவு நடத்திய சோதனையின் போது 12 பேரிடம் வாக்காளர் அடையாள அட்டையும், 11 பேரிடம் ரேசன் கார்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக முழு விசாரணையை தொடங்கியுள்ள போலீஸ், நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

நீண்ட கால விசாவில் பாகிஸ்தானின் சிந்தி இந்துக்கள் இந்தியாவில் இருப்பது சட்டப்பூர்வமானது. ஆனால் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது என்பது சட்டப்பூர்வமானது கிடையாது. எனவே, சட்டவிரோதமாக ஆவணங்களை வைத்திருப்பதை தடுக்க இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி டேராடூனில் 275 பாகிஸ்தானியர்கள் உள்ளதாகத் தெரிகிறது. #PakistanCitizens #DehradunPolice
Tags:    

Similar News