செய்திகள்

கேரள கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட சம்பவம் - மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் அமைப்பின் மீது கிரிமினல் வழக்கு

Published On 2018-09-15 09:59 GMT   |   Update On 2018-09-15 09:59 GMT
கேரளாவில் பிஷப்பால் வன்புணர்வு செய்யப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படைத்தை வெளியிட்ட மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் என்ற அமைப்பின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Kerala #KeralaNun
திருவனந்தபுரம்:

கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். பி‌ஷப்  பிராங்கோ முல்லக்கல் கோட்டயத்திற்கு வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிஷப்பை இன்னும் கைது செய்யவில்லை. இதனால் கன்னியாஸ்திரிகள் இணைந்து அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும், கூட்டு கிறிஸ்தவ கவுன்சிலின் உறுப்பினர் ஸ்டீபன் மேத்யூ, பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 8 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில், சமீபத்தில் பிஷப்புக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் என்ற அமைப்பு, பாதிப்புக்குள்ளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தையும் வெளியிட்டது. இந்த செயல் பலரது கண்டனங்களுக்கு உள்ளானது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் அமைப்பின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கோட்டையம் எஸ்.பி.ஹரிசங்கர், 19-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப்புக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #Kerala #KeralaNun 
Tags:    

Similar News