செய்திகள்

ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு வழக்கு - குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு

Published On 2018-09-15 08:23 GMT   |   Update On 2018-09-15 08:23 GMT
அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. #Rewari #RewariRapeCase
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி,  கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை இன்று நேரில் சந்தித்த எஸ்.பி. நஷ்னீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருவதாகவும், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் உறுதி அளித்த எஸ்.பி., குற்றவாளி குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். #Rewari #RewariRapeCase
Tags:    

Similar News