செய்திகள்

பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி

Published On 2018-09-12 10:18 GMT   |   Update On 2018-09-12 10:18 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலையில் இன்று கொதிகலன் வெடித்த விபத்தில் 6 பணியாளர்கள் உயிரிழந்தனர். #Bijnorexplosion #petrochemicalfactory
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்துக்குட்பட்ட நகினா சாலையில் மோஹித் பெட்ரோ கெமிக்கல் பேக்டரி என்னும் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு கொதிகலன் (பாய்லர்) கடந்த 5 நாட்களாக இயங்கவில்லை.

இன்று பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது, ஒரு பகுதியை வெல்டிங் செய்தபோது எதிர்பாராதவிதமாக அந்த கொதிகலன் தீப்பிழம்பாக மாறி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் காயமடைந்த 6 பணியாளர்கள் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து பற்றிய செய்தி வெளியானதும் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #Bijnorexplosion #petrochemicalfactory
Tags:    

Similar News