செய்திகள்

வாழைப்பழ ஜனநாயகமாக மாறிவரும் இந்தியா - சிவசேனா கடும் தாக்கு

Published On 2018-09-05 10:21 GMT   |   Update On 2018-09-05 10:21 GMT
மத்தியில் பாஜக ஆட்சியில் வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது இந்தியா என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நட்ந்து வருகிறது. அங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. ஆனாலும், இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செயல்படும் விதத்தை சிவசேனா கடுமையாக தாக்கி வருகிறது.

இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இந்தியா வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கூறுகையில், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது. தேசிய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலைப்படாமல் பிசியாக உள்ளார். 

எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலையோ 100 ரூபாயை நெருங்குகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
  
விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருள்கள் , சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய திட்டங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என தெரிவித்துள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
Tags:    

Similar News