செய்திகள்

கேரளாவில் எலி காய்ச்சலுக்கு மேலும் 11 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

Published On 2018-09-04 12:38 GMT   |   Update On 2018-09-04 12:38 GMT
கேரளா மாநிலத்தில் வெள்ளம் வடிந்த பின்னர் வேகமாக பரவிய எலி காய்ச்சலுக்கு நேற்றும் 11 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #Ratfeverdeath #KeralaRatfever
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தை சூறையாடிய பெருமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்குக்கு 600-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் என்னும் தொற்றுநோய் வேகமாக பரவ தொடங்கியது. இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது.



எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்த 842 பேரில் 372 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நோய் தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் வரை எலி காய்ச்சலுக்கு 55 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 11 பேர் உயிரிழந்ததால் இன்றையை நிலவரப்படி பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #Ratfeverdeath #KeralaRatfever
Tags:    

Similar News