செய்திகள்

பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் - சந்திரபாபு நாயுடு

Published On 2018-09-04 06:57 GMT   |   Update On 2018-09-04 06:57 GMT
பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ChandrababuNaidu #PetrolPrice

அமராவதி:

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருக்கிறது.

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41 ஆகவும், டீசல் விலை ரூ.75.39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக அமராவதியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பலமே காரணம். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி காரணமில்லை.


பணமதிப்பு நீக்கம் மிகப்பெரிய தோல்வியாகும். ஏனென்றால் மக்கள் இன்று வரை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசின் தவறான கொள்கையால் கடந்த 1½ ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தால்தான் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்.

பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும். இது நாட்டை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக சரிவடையும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #PetrolPrice

Tags:    

Similar News