செய்திகள்

பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க கோரும் வழக்கில் மல்லையா பதிலளிக்க உத்தரவு

Published On 2018-09-03 11:15 GMT   |   Update On 2018-09-03 11:35 GMT
தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையாவை அறிவிக்கக்கோரும் வழக்கில் அவர் மூன்று வாரங்களில் பதிலளிக்க மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VijayMallya #Mallya
மும்பை:

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் பாக்கி வட்டியுடன் சேர்த்து ரூ. 9,990.07 கோடியாக இருக்கிறது. இதனை செலுத்தாமல் அவர் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடுகடத்தவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அந்நாட்டு கோர்ட்டிலும் நடந்து வருகிறது.

இதற்கிடையே, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

தலைமறைவு பொருளாதார குற்றவாளி என அறிவிக்கக்கோரும் வழக்கில் தான் பதிலளிக்க அவகாசம் தர வேண்டும் என விஜய் மல்லையா தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 24-ம் தேதி வரை பதிலளிக்க மல்லையாவுக்கு அவகாசம் தந்து வழக்கை ஒத்தி வைத்தார். 
Tags:    

Similar News