செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி - முதல்வர் யோகி ஆதித்யநாத்

Published On 2018-09-02 07:35 GMT   |   Update On 2018-09-02 07:35 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி; எந்த தேதி என்பதை ராமர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #YogiAdityanath
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ஜனதாவின் பலம் அதிகரித்து வருவதை கண்டு எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன. இதனால் நாட்டின் வளர்ச்சியை அக்கட்சிகள் எதிர்க்கின்றன. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் கைகோர்த்துள்ளன. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. அந்த குழப்பத்தில் ஆதாயம் அடைய அந்த கட்சிகள் விரும்புகின்றன.

கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதை கூட எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்க முடியவில்லை. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திறன் கொண்ட ஒரு தலைவரை எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்த முடியவில்லை.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி. இதில் மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் ராமர்தான் கோவில் கட்டப்பட வேண்டிய தேதியை முடிவு செய்ய வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா எதிர்கொள்ளும். தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சாதியை வைத்து அரசியல் செயயும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath #RamaTemple
Tags:    

Similar News