செய்திகள்

ராகுல் விமான கோளாறுக்கு விமானியின் தவறே காரணம்

Published On 2018-09-01 09:56 GMT   |   Update On 2018-09-01 09:56 GMT
கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் பயணித்த விமானத்தின் கோளாறுக்கு விமானியின் தவறே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் என்று தெரிய வந்தது. #Congress #RahulGandhi
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஊப்ளிக்கு விமானத்தில் சென்றார்.

விமானம் ஊப்ளியை சென்றடைந்ததும் 40,935 அடி உயரத்தில் பறக்கும் வகையில் தானியங்கி மூலம் புரோகிராம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் விமானி அதை தானியங்கிக்கு மாற்றி உயரத்தை குறைத்து குறிப்பிட்ட நேரத்துக்கு பதில் 24 செகண்டுகள் முன்கூட்டியே இயக்கினார்.

இதனால் விமானம் திடீர் என்று 735 அடி உயரத்துக்கு இறங்கியது. விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் விமானிகள் சாமர்த்தியமாக இயக்கி விமானத்தை பத்திரமாக தரை இறக்கினர்.

இதுபற்றி விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் விமானியின் தவறே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் என்று தெரிய வந்தது. நேற்று இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், தானியங்கி கட்டுப்பாட்டு கருவிகளை விமானி மாற்றி அமைத்து, தானே இயக்கும் போது அதனால் ஏற்பட்ட தாமதமே தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்றும், எனவே சம்பந்தப்பட்ட விமானிக்கு அது தொடர்பான பயிற்சியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
Tags:    

Similar News