செய்திகள்

புதிய கவர்னரும் எங்க ஆளுதான் - ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க தலைவர் சர்ச்சை கருத்து

Published On 2018-08-30 10:42 GMT   |   Update On 2018-08-30 10:42 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சத்ய பால் மாலிக், பா.ஜ.க ஆதரவாளர் தான் என அம்மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் என்.என் வோஹ்ரா ஆளுநராக இருந்துவந்தார். அவர் சமீபத்தில் நீக்கப்பட்டு, அவரது இடத்துக்கு சத்ய பால் மாலிக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் புதிய ஆளுநராக பதவியேற்றார்.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் மாலிக், முன்னாள் ஆளுநர் என்.என் வோஹ்ரா தனது கருத்தில் நிலையாக இருந்ததால் தான் அவரை மாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர்தான் எனவும் ரெய்னா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி தலைமையில் கூட்டணியில் நடைபெற்ற ஆட்சியை பா.ஜ.க தாமே முன்வந்து கலைத்தது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
Tags:    

Similar News