செய்திகள்

மத்திய மந்திரி உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை

Published On 2018-08-23 19:23 GMT   |   Update On 2018-08-23 19:23 GMT
மத்திய மந்திரி உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரி தனேரிவா தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். #UmaBharti #PersonalSecurity
போபால்:

மத்திய குடிநீர் வழங்கல்துறை மந்திரி உமாபாரதியின் பாதுகாவலர் குழுவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராம் மோகன் தனேரிவா. மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த அவர், மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.



இது தொடர்பாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தம்பதியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தனேரிவா மீது வழக்கு தொடர வேண்டும் என அவரது மனைவி உறுதியாக இருந்தார்.

எனவே கணவன்-மனைவி இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனேரிவா தனது தலையில் சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் போலீஸ் வாகனத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மத்திய மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மற்றொரு மந்திரியான நரேந்திர சிங் தோமரின் உதவியாளர் கடந்த 20-ந்தேதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  #UmaBharti #PersonalSecurity #tamilnews
Tags:    

Similar News