செய்திகள்

தலைக்கு ரூ.47 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் தலைவர் போலீசாரிடம் சரண்

Published On 2018-08-23 19:14 GMT   |   Update On 2018-08-23 19:14 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ரூ.47 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் தலைவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம், ரஜ்னாண்ட்கோன் பகுதியை சேர்ந்தவர் பகத் சிங், இவர், நக்சல் அமைப்பின் மூத்த தலைவர்களுல் ஒருவராக இருந்து வருகிறார்.

இவருக்கு நக்சலைட் அமைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதால், இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். மேலும், இவரது தலைக்கு ரூ.47 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில போலீசார் கூட்டாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் போலீசாரிடம் நேற்று பகத் சிங் சரணடைந்தார்.

பழங்குடியின மக்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நக்சல் இயக்கத்தில் சேர்ந்த பகத் சிங் மீது நக்சல் இயக்க முக்கிய தலைவர்கள் நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்துடன் இருந்ததாலும்,  நக்சல் அமைப்பில் உள்ள பழங்குடி இனத்தவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டதாலும்  அவர் அமைப்பில் இருந்து விலகி சரணடைந்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News