செய்திகள்

பாரதிய ஜனதா செயற்குழு 8-ந்தேதி கூடுகிறது

Published On 2018-08-23 13:39 IST   |   Update On 2018-08-23 13:39:00 IST
பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் 8, 9-ந்தேதிகளில் 2 நாட்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #BJPExecutiveMeeting
புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடப்பதாக இருந்தது. அப்போது உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் மரணம் அடைந்தார். இதனால், பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8, 9-ந்தேதிகளில் 2 நாட்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #BJP #BJPExecutiveMeeting
Tags:    

Similar News