செய்திகள்

கேரளாவுக்கு நிவாரணமாக ரூ.20 கோடி அளித்த மகாராஷ்டிரா

Published On 2018-08-18 10:29 GMT   |   Update On 2018-08-18 10:29 GMT
மழை வெள்ளத்தால் அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் கேரள மாநிலத்துக்கு மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட் மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. #KeralaRains #KeralaFloods
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.



இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. தமிழகம், டெல்லி, தெலுங்கானா, பீகார், ஆகிய மாநிலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில், கேரளாவுக்கு 20 கோடி ரூபாய் நிவாரண நிதியாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல், குஜராத் மாநிலம் 10 கோடி ரூபாயும், ஜார்க்கண்ட் மாநிலம் 5 கோடி ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளது. #KeralaRains #KeralaFloods 
Tags:    

Similar News