செய்திகள்

மருத்துவ காப்பீட்டில் இனி மனநோய்க்கும் சிகிச்சை - காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகமை சுற்றறிக்கை

Published On 2018-08-17 12:17 GMT   |   Update On 2018-08-17 12:17 GMT
மருத்துவ காப்பீடு பெற்றுள்ள தனிநபர்களுக்கு இனி மனநோய்க்கும் சிகிச்சை அளிக்கும் புதிய நடைமுறையை இந்திய காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகமை வலியுறுத்தியுள்ளது. #HealthPolicy #IRDAI
பெங்களூரு:

மனிதர்களை தாக்கும் நோய்களை காட்டிலும், அதற்கு ஆகும் செலவுகள் குறித்த அச்சம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையை மாற்ற அரசு சார்பிலும், வங்கிகள் சார்பிலும் காப்பீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த காப்பீடு திட்டங்களை ஒழுங்குமுறை படுத்தும் முகமையான காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகமை சமீபத்தில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதில், உடலில் ஏற்படும் சாதாரண நோய்களுக்கு அளிக்கப்படும் காப்பீடு உதவியை போல், மனநோயையும் காப்பீடு திட்டத்துக்குள் அனைத்து வங்கிகளும் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம், மனநோயாளிகளும் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை காப்பீடு மூலம் பெற இயலும். இதுகுறித்து பேசிய டிடிகே நிறுவனத்தின் சி.ஓ.ஓ, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விழிப்புணர்வையும், அவர்களை ஏற்கும் மனநிலையையும் அளிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். #HealthPolicy #IRDAI
Tags:    

Similar News