செய்திகள்

அசாமில் பசு கடத்தியதாக 4 பேர் மீது கொடூர தாக்குதல் - ஒருவர் பலி

Published On 2018-08-16 12:26 GMT   |   Update On 2018-08-16 12:26 GMT
அசாம் மாநிலம் பிஸ்வந்த் மாவட்டத்தில் பசுவை கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #MobLynching #Assam
திஸ்பூர்:

இந்தியாவில் சமீபத்தில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற பல்வேறு  வதந்திகளால் ஏற்படும் விளைவுகள் உயிர்பலி வாங்குவதாகவே இருக்கின்றன. இதுபோன்ற கும்பல் தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில், அசாம் மாநிலம் பிஸ்வந்த் கிராமத்தில் பசு கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சங்கட் டண்டி என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளை 4 பேர் வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும், அதனை பார்த்த சங்கட், கூச்சலிட்டபோது ஊர்மக்கள் அந்த கும்பலை வழிமறைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான திபென் ராஜ்போங்ஸ்கி என்பவர் உயிரிழந்தார். மேலும், புஜன் காடோவர், புல்சந்த் சாஹு, பிஜோய் நாயக், ஆகிய 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பசுக்களை கடத்தியதாக 4 பேர் மீதும், கும்பல் தாக்குதலுக்காக தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றங்கள் எத்தகையதாக இருந்தாலும், அதற்கு மக்கள் தண்டனை கொடுப்பதும், சட்டத்தை கையில் எடுப்பதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தவிர்க்கப்படும்போதே இதுபோன்ற சம்பவங்களை முற்றிலுமாக தடுக்க முடியும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். #MobLynching #Assam
Tags:    

Similar News