செய்திகள்

குற்றப்பத்திரிகையை டெல்லி போலீஸ் லீக் செய்ய கூடாது - கோர்ட்டை நாடிய ஆம் ஆத்மி

Published On 2018-08-14 16:30 GMT   |   Update On 2018-08-14 16:30 GMT
டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களை வெளியிடுவதாக கூறி கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்துள்ளது. #DelhiChiefSecretary #AamAadmi
டெல்லி:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் தாக்கியதாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தார். இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை கைது செய்தனர்.

தற்போது இருவரும் நிபந்தனை ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கில் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 மந்திரிகளின் பெயர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு வரும் 25-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களை போலீசார் ஊடககங்களுக்கு வழங்குவதாக கூறி ஆம் ஆத்மி கட்சி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Tags:    

Similar News