செய்திகள்

இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ் நைபால் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-08-12 07:52 GMT   |   Update On 2018-08-12 07:52 GMT
இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் உள்ள உள்ள தனது இல்லத்தில் இன்று மரணமடைந்தார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். #VSNaipaul #PMModi
புதுடெல்லி:

கரீபியன் தீவில் பிறந்த இந்திய வம்சாவளியான வி.எஸ் நைபால் தனது எழுத்துக்கள் மூலம் உலகம் அறியும் பிரபலம் ஆனவர். இவர் தனது ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக 2001-ம் ஆண்டு மிக உயரிய விருதான நோபல் பரிசை பெற்றார்.

85 வயதான இவர் இன்று லண்டனில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்க்த்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.



அவரது இரங்கல் செய்தியில், நைபாலின் இறப்பு உலக இலக்கியத்தின் மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார். மேலும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #VSNaipaul #PMModi
Tags:    

Similar News