செய்திகள்

டெல்லியில் இன்று பினராயி விஜயன் தங்கியிருந்த இல்லத்தில் கத்தியுடன் புகுந்த நபர்

Published On 2018-08-04 12:49 IST   |   Update On 2018-08-04 12:49:00 IST
டெல்லியில் இன்று பினராயி விஜயன் தங்கியிருந்த இல்லத்தில் கத்தியுடன் புகுந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். #PinarayiVijayan

புதுடெல்லி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லி சென்றார். அங்குள்ள கேரள விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார்.

காலை 7.30 மணிக்கு அவர் பொலிட் பீரோ கூட்டத்துக்கு புறப்பட்டார். அவரை பேட்டி காண கேரள விருந்தினர் மாளிகை முன்பு ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.

அப்போது நபர் சந்தேகத்துக்கு இடமாக நிற்பதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர். அவர்களை அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் கைப்பையில் கத்திவைத்திருந்தார். அந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டினார். மேலும் பினராயி விஜயனை சந்திக்க அனுமதிக்க வேண்டும், அவர் எனது பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அவரை சந்திக்க அனுமதிக்க விட்டால் தற்கொலை செய்வேன் என மிரட்டினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபர் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் சுற்றி திரிந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரது பெயர் விமல்ராஜ், கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட பகுதியில் நபர் ஒருவர் கத்தியுடன் புகுந்தது எப்படி? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News