செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தால் வயிற்று போக்கு நோய் குறைந்துள்ளது- உலக சுகாதார நிறுவனம் தகவல்

Published On 2018-08-04 07:15 GMT   |   Update On 2018-08-04 07:15 GMT
தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. #WHO #SwachhBharatMission
புதுடெல்லி:

துய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு சுற்றுப்புற சூழல் மாசு பாட்டில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

இதனால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.


சுகாதார குறைபாடு மற்றும் சத்துணவு இன்மையால் இந்தியாவில் குறை பிரசவம் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குறை பிரசவம் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 1 கோடியே 40 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இத் தகவலை குடிநீர் மற்றும் உடல் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் பரமேஸ்வரன் அய்யர் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். அப்போது கடும் பணி சுமைக்கு இடையே தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக செயல்படுத்திய தனது குழுவை பாராட்டினார். #WHO #SwachhBharatMission
Tags:    

Similar News