செய்திகள்

நண்பனை கொன்ற பயங்கரவாதிகள் - பழிவாங்க வந்த தளபதிகள்

Published On 2018-08-03 13:10 GMT   |   Update On 2018-08-03 13:10 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள் 50 பேர் ராணுவம் மற்றும் போலீசில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். #JammuKashmir #RevengeforFriend
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதத்தில் ரமலான் விடுமுறையின் போது, தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவுரங்கசீப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தனது நண்பரின் மரணத்தில் தீரா துயரடைந்த அவுரங்கசீப்பின் நண்பர்கள் அந்த பயங்கரவாதிகளை பழிவாங்குவது என முடிவு செய்தனர். மேலும், இந்தியாவில் உலவும் பயங்கரவாதத்தையும் அடியோடு அழிக்க அவர்கள் உறுதிகொண்டனர்.



இதனால், சவூதியில் தாங்கள் பார்த்த வேலையை கைவிட்டு 50 பேர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். நண்பரை கொன்ற பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதையே உயர்ந்த லட்சியமாக கொண்ட அவர்கள் தற்போது ராணுவம் மற்றும் காவல்துறையில் இணைய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.

நண்பரின் உயிர் இழப்புக்கு காரணமான கொடியவர்களை பழிவாங்க முறையான பாதையை கையில் எடுத்து போராட இருக்கும் இந்த 50 பேருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டும், ஆதரவும் குவிந்தவண்ணம் உள்ளது. #JammuKashmir #RevengeforFriend
Tags:    

Similar News