செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு - விமானங்கள் புறப்பாடு தாமதம்

Published On 2018-07-31 13:57 GMT   |   Update On 2018-07-31 13:57 GMT
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் செக்-இன்கள் பணியாளர்களால் கைமுறையாக செய்து வருகின்றனர். இதனால், விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. #MumbaiAirport
மும்பை:

நாட்டின் இரண்டாவது பிஸியான மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் புறப்பாடு பகுதிகளில் உள்ள கணினிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, பயணிகளை செக்-இன் செய்வது பணியாளர்களால் கைமுறையாக செய்யப்படுகிறது.

இதன் காரணமாக பயணிகள் அவதியடைந்துள்ளனர். சில விமானங்களின் புறப்பாடு ஒரு மணிநேரம் தாமதமாகியுள்ளது. கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News