செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

Published On 2018-07-23 07:56 GMT   |   Update On 2018-07-23 07:56 GMT
ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #AircelMaxisCase #PChidambaram
புதுடெல்லி:

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கார்த்தி சிதம்பரத்துடன், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த குற்றப்பத்திரிகை குறித்து வரும் 31-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஆய்வு செய்ய உள்ளார்.



எனவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ. நிர்பந்தப்பட்டதாக சிதம்பரம் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

இதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #AircelMaxisCase #PChidambaram

Tags:    

Similar News