செய்திகள்

பாராளுமன்றத்தில் மோடி நன்றாக நடித்தார் - தெலுங்கு தேசம் எம்.பி. கிண்டல்

Published On 2018-07-21 14:24 IST   |   Update On 2018-07-21 14:24:00 IST
பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி நன்றாக நடித்தார் என்று தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி சீனிவாஸ் கூறியுள்ளார். #Parliament #PMModi

நகரி:

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி நானி என்ற சீனிவாஸ் கொண்டுவந்தார்.

இதனால் அவர் பிரதமர் மோடி பதில் உரை நிகழ்த்திய பின்பு தீர்மானத்தை கொண்டு வந்தவர் என்ற முறையில் தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி சீனிவாஸ் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி அவர்களே தெலுங்கு தாயை தாயாக கூப்பிட்டீர்கள். இப்போது அந்த தாயை கொல்வதற்கு தயாராகி விட்டீர்கள். 2014 தேர்தலுக்கு முன்பு எத்தனையோ முறை ஆந்திராவுக்கு பிரசாரத்துக்கு வந்து வாக்குறுதிகளை அளித்தீர்கள். ஆந்திரா மக்களை மோசம் செய்து விட்டீர்கள். கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டீர்கள்.


இப்போது பிரதமர் மோடி அற்புதமாக பிரசங்கம் செய்தார். அவரது 1½ மணிநேர பிரசங்கத்தை கேட்டேன். நீங்கள் சிறந்த நடிகர். ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சி விட்டீர்கள். அதிரடி சினிமா படம் பார்ப்பதுபோல் இருந்தது.

ஆந்திரா பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்களும் தான் காரணம். ஆந்திரா பிரிவினை தீர்மானம் மேல்-சபையில் நிறைவேற பா.ஜனதாவும் ஒத்துழைப்பு அளித்தது.

உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ராமாயணத்தில் இருந்து சரித்திரத்தை எடுத்துக் கூறினார். ஆந்திரா பிரிவினை சாஸ்திரிய முறைப்படி நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  #Parliament  #PMModi

Tags:    

Similar News