செய்திகள்

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - முதல் மந்திரி இரங்கல்

Published On 2018-07-19 08:15 GMT   |   Update On 2018-07-19 08:15 GMT
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. #UttarakhandBusAccident
டேராடூன்:  

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலியானதாக முதக் கட்ட தகவல்கள் வெளியாகின.

திஹ்ரி மாவட்டம் மற்றும் சம்பா மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பேருந்து விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலியானவர்களுக்கு மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மாநில அரசு சார்பில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UttarakhandBusAccident
Tags:    

Similar News