செய்திகள்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது - புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு

Published On 2018-07-18 05:52 GMT   |   Update On 2018-07-18 05:52 GMT
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். #Parliament #MonsoonSession
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிய நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக மத்திய அரசு நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது.

அப்போது அனைத்துக்கட்சிகளும் எழுப்புகிற பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்குவதாகவும், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை அனைவரும் எழுப்புவார்கள் என்று தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் பாராளுமன்றம் சுமுகமாக இயங்குவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



எனினும், ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. மக்களவை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. #Parliament #MonsoonSession

Tags:    

Similar News