search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliamentary monsoon session"

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட நடன கலைஞர் சோனல் மன்சிங், பேராசிரியர் ராகேஷ் சின்ஹா உள்பட 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர். #parliamentarymonsoonsession #Rajyasabha
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய நடன கலைஞர் சோனல் மன்சிங், டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ராகேஷ் சின்ஹா, ஒடிசாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் ரகுநாத் மொஹபத்ரா ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.



    மேலும், கேரளாவை சேர்ந்த சிஐடியு மாநில பொது செயலாளர் எலமரம் கரீம், சிபிஐ பினாய் விஸ்வம், கேரள காங்கிரஸ் தலைவர் மாணி உள்பட மொத்தம் 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். #parliamentarymonsoonsession #Rajyasabha
    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். #Parliament #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிய நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக மத்திய அரசு நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது.

    அப்போது அனைத்துக்கட்சிகளும் எழுப்புகிற பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்குவதாகவும், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை அனைவரும் எழுப்புவார்கள் என்று தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் பாராளுமன்றம் சுமுகமாக இயங்குவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



    எனினும், ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. மக்களவை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. #Parliament #MonsoonSession

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் என்பதால் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.#pmmodi #parliamentarymonsoonsession
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது.

    மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை
    தொடங்கியது. அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் முடிகிறது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
     
    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று அமைதியாக நடைபெற வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகல் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

    மேலும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    #pmmodi #parliamentarymonsoonsession
    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். #pmmodi #parliamentarymonsoonsession
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி முடிகிறது. 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.

    ‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. மேலும் புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், கூட்டம் அமைதியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நேற்று டெல்லியில் கூட்டி ஆலோசனை நடத்தியது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூ) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘அனைத்துக்கட்சிகளும் எழுப்புகிற பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை அனைவரும் எழுப்புவார்கள் என்று நம்புகிறேன்’’ என குறிப்பிட்டார்.

    நாடாளுமன்றம் சுமுகமாக இயங்குவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், ‘‘நாடாளுமன்றம் இயங்க வேண்டும், தேச நலனை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக அமைந்து உள்ளது. நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டு நலனின் அடிப்படையில் அனைத்துக்கட்சிகளிடமும் இருந்து அரசு ஒத்துழைப்பை நாடுகிறது’’ என்று கூறினார்.

    அனைத்துக்கட்சி கூட்டம், இணக்கமான சூழலில் நடந்து முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    இருப்பினும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் இட ஒதுக்கீடு விவகாரம், டெல்லி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையே நிலவி வருகிற மோதல் போக்கு, காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் கட்சி என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து உள்ளிட்ட பிரச்சினைகளில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.

    இந்நிலையில் டெல்லியில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அளித்த பேட்டியில், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் சில கட்சிகளை சந்தித்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    மேல்சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக்காலம் முடிந்து விட்டதால், புதிய துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த கூட்டத்தொடரில் நடத்தப்படும்.

    புதிய துணைத்தலைவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

    இது தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியது உள்ளது. #pmmodi #parliamentarymonsoonsession
    ×