செய்திகள்

அசாமின் விளையாட்டு தூதராக ஹிமா தாஸ் நியமனம் - முதல்மந்திரி அறிவிப்பு

Published On 2018-07-17 14:35 GMT   |   Update On 2018-07-17 14:35 GMT
அசாம் மாநிலத்தின் விளையாட்டுத் துறை தூதராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக அம்மாநில முதல்மந்திரி சர்பனந்தா சோனோவால் அறிவித்துள்ளார். #HimaDas #AssamCM
திஸ்ப்பூர்:

சமீபத்தில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இளம் வீராங்கனை ஹிமா தாஸ் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். விளையாட்டில் மட்டுமன்றி, தனது தேசபக்தியால் இந்தியாவில் அனைவரது உள்ளங்களையும் வென்றார்.



இந்நிலையில், ஹிமா தாஸின் இல்லத்துக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்த அசாம் மாநில முதல்மந்திரி சர்பனந்தா சோனோவால், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஹிமா தாஸின் வெற்றியின் மூலம் பெண்களின் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், ஹிமா தாஸுக்கு 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், மாநிலத்தின் விளையாட்டுத்துறை தூதராக ஹிமா தாஸ் நியமிக்கப்படுவார் எனவும் முதல்மந்திரி சோனோவால், ஹிமா தாஸின் பெற்றோர்களுக்கு வாக்குறுதி அளித்தார். #HimaDas #AssamCM
Tags:    

Similar News