செய்திகள்

தூக்கத்தை இழந்து தவிக்கும் காங்கிரஸ் - மோடி கிண்டல்

Published On 2018-07-11 14:08 GMT   |   Update On 2018-07-11 14:08 GMT
மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் தூக்கத்தை இழந்து தவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சண்டிகர் :

 பஞ்சாப் மாநிலம், முக்த்சர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

’விவசாய பொருட்களுக்கான அடிப்படை விலையை மத்திய அரசு உயர்த்திய பிறகு விவசாய சகோதர்கள் இப்போது நிம்மதியாக வாழலாம், அதிகமாக வருமானம் ஈட்டலாம், அமைதியாக தூங்கலாம். ஆனால், இந்த மக்கள் நலதிட்டங்களை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தேசத்தின் ஆன்மாவான விவசாயிகள், இத்தனை வருடங்களாக விவசாயத்தில் முதலீடு செய்த தொகையில் இருந்து 10 சதவிகதம் மட்டுமே கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. இதற்கான காரணங்கள் எனக்கு தெரியும் இவ்வளவு வருடங்களாக காங்கிரஸ் பொய்களை மட்டுமே கூறி விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது.

வருகிற 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் வகையில் அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News