செய்திகள்

உ.பி.யில் கார் மீது லாரி மோதி கோர விபத்து- 8 பேர் உயிரிழப்பு

Published On 2018-07-11 13:37 IST   |   Update On 2018-07-11 13:37:00 IST
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #UPAccident
கன்னாஜ்:

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வந்துள்ளனர். கோவிலில் வழிபாடு முடிந்து, காரில் ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 4 மணியளவில் லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் திர்வா அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் சிதைந்துபோனது. காருக்குள் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். #UPAccident
Tags:    

Similar News