செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை ரெயில் நிலையங்கள்- 2000 பயணிகள் படகுகள் மூலம் மீட்பு

Published On 2018-07-10 21:29 IST   |   Update On 2018-07-10 21:58:00 IST
மும்பையில் பெய்து வரும் கனமழையால் ரெயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் சிக்கித்தவித்த வெளியூர் பயணிகள் 2000 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். #MumbaiRains
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டன. தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் மேற்கொண்டு ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகளும் இறங்கி செல்ல முடியவில்லை.


இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 6 படகுகளுடன் அவர்கள் வந்ததும், படகுகள் மூலம் இரண்டு ரெயில்களிலும் பயணம் செய்த சுமார் 2000 பயணிகளை மீட்கப்பட்டு, அவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பால்கர் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை அதிகபட்ச அளவாக 240 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MumbaiRains
Tags:    

Similar News