செய்திகள் (Tamil News)

தவறான திசையில் இந்திய பொருளாதாரம் - அமர்த்தியா சென் எச்சரிக்கை

Published On 2018-07-09 14:18 GMT   |   Update On 2018-07-09 14:18 GMT
இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைவதாக கூறப்பட்டாலும், 2014-ம் ஆண்டிலிருந்து அது தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேசியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  பொருளாதார நிபுணர்  அமர்த்தியா சென் கூறியதாவது:-

இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்ட போதிலும், 2014 ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

20 ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதாரத்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது. 

மக்களிடையே நிலவும் பொருளாதார சமத்துவமின்மையைக் கண்டுகொள்ளாமல் அரசு விலகியிருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்கிறார்கள் என கூறினார். 
Tags:    

Similar News