செய்திகள்

தாமதம் போதும், குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் - நிர்பயாவின் தந்தை வலியுறுத்தல்

Published On 2018-07-09 15:16 IST   |   Update On 2018-07-09 15:16:00 IST
டெல்லி மாணவி நிர்பயா வழக்கின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரது தந்தை செய்தியாளர்களை சந்தித்தார். #NirbhayaVerdict
புதுடெல்லி:

மரண தண்டனையை எதிர்த்து டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சுப்ரீம் கோர்ட் அவர்களின் மரண தண்டனையை இன்று உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் வாசலில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த நிர்பயாவின் தந்தை 'இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பில் மறு ஆய்வு என்ற பெயரில் கால தாமதம் ஏற்படுத்தப்பட்டது.

இதனால், பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மேலும் அதிகமாகி உள்ளது. தற்போது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காலம் தாழ்த்தாமல், குற்றவாளிகளை விரைவாக தூக்கிலிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.



இதேபோல், சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ள நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, நீதிமன்றத்தின் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். நீதி தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவாக தூக்கு தண்டனையை நிறைவேற்றி இதர பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #NirbhayaVerdict
Tags:    

Similar News