செய்திகள்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏகே கோயல் நியமனம்

Published On 2018-07-06 19:23 IST   |   Update On 2018-07-06 19:23:00 IST
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ள ஏ.கே கோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #AKGoel #NGT
புதுடெல்லி:

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தற்போது, இதன் தற்காலிக தலைவராக நீதிபதி ஜாவத் ரஹிம் உள்ளார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ள ஏ.கே கோயல் பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள கோயல், சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் திறமையானவர் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News