செய்திகள்

இந்தியாவில் கால்பதிக்கிறது சீன வங்கி - பச்சைக்கொடி காட்டியது ரிசர்வ் வங்கி

Published On 2018-07-04 11:39 IST   |   Update On 2018-07-04 11:39:00 IST
இந்தியா - சீனா நாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், பேங்க் ஆப் சீனா இந்தியாவில் கிளைகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #BankOfChina #ReserveBank
புதுடெல்லி:

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையே நடந்த சமீபத்திய சந்திப்பில் சீன அரசு வங்கியான ‘பேங்க் ஆப் சீனா’வின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்து பேசப்பட்டது. மோடி அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், சீன வங்கி அனுமதிக்காக விண்ணப்பித்தது.

இந்நிலையில், இந்தியாவில் கிளைகள் தொடங்க சீன வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News