செய்திகள்

பாகுபாடுகள் அற்ற ராமராஜ்யம் தான் ஆட்சிமுறைக்கு சிறந்த முன்னுதாரனம் - யோகி ஆதித்யநாத்

Published On 2018-07-02 19:49 IST   |   Update On 2018-07-02 19:49:00 IST
இந்திய ஆட்சி முறைக்கு பாகுபாடுகள் அற்ற ராமராஜ்யம் தான் சிறந்த முன்னுதாரனம் என உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்யநாத் இன்று தெரிவித்துள்ளார்.
லக்னோ :

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அப்னா தள் கட்சி, ஆளும் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. லக்னோவில் அக்கட்சியின் நிறுவனர் சோன் லால் படேலின் 69-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது

பிறந்த நாள் விழா நிகழ்சியில் கலந்துகொண்டு உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்யநாத் உரையாற்றுகையில், ‘ஆட்சிமுறைக்கு ராம ராஜ்யம் மட்டுமே சிறந்த முன்னுதாரனம். ஏழை, பணக்காரர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்களிடம்  ராமராஜ்யத்தில் எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் இருந்தது. இதுதான் நாங்கள் ராம ராஜ்யத்தை தேர்வு செய்தற்கான முக்கிய காரணம்’ என அவர் தெரிவித்தார்.

மேலும், அம்பேத்கரை போல சோன் லால் படேலும் சாதியால் சமூகம் பிளவுபடக்கூடாது என பாடுபட்டார் எனவும் யோகி தெரிவித்தார்.
Tags:    

Similar News